URAVIN RAAGANGAL-S.K.SHANMUGANATHAN / உறவின் ராகங்கள் - எஸ். கே. சண்முகநாதன்
Regular priceRs. 355.00
/
- In stock, ready to ship
- Inventory on the way
கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக கடைப் பிடிக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு காலைப்பொழுதில் அருகிலிருந்த திருக்கோவிலிலிருந்து காற்றில் தவழ்ந்து வந்த இனிமையான நாதஸ்வர இசையோசை என்னை கவர்ந்திழுத்தது. சில நிமிடங்களில் அந்த இசைக்கலைஞரை சந்தித்து உரையாடியபோது திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் அப்போது இல்லாததால் வாழ்வாதாரம் மிகவும் சிதிலமடைந்திருப்பதாக அவர் கூறியதை கேட்டதும் என் மனதில் தோன்றிய கதாபாத்திரம்தான் ‘செல்லையா!’. இறை ஆலயத்தில் மட்டுமே நாதஸ்வரம் வாசித்து வாழும் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் பயணிக்கும் என்ற எண்ணம் மேலெழுந்ததால் அதில் உருவானதே இந்த ‘உறவின் ராகங்கள் - இதயங்களின் நாத சுரம்.’
எனது எழுத்துக்களில் உருவான இந்தப் புத்தகத்தை, நாதஸ்வர இன்னிசையால் நம்மை மகிழ்வித்து வாழ்ந்து மறைந்த மற்றும் இன்றும் இப்போதும் எப்போதும் நம்மை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் அனைத்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசை மேதைகளுக்கு அன்புக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.
என்றும் அன்புடன்
எஸ்.கே. சண்முகநாதன்

Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.
Ex: Shipping and return policies, size guides, and other common questions.